அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்!! அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!!

0
43
Breakfast program for all schools!! The Chief Minister's order to the officers!!
Breakfast program for all schools!! The Chief Minister's order to the officers!!

அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்!! அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட உத்தரவு!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த திட்டம் தற்பொழுது வரை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த வகையில் தமிழகத்தில் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டை போகும் வகையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமாகும்.

இந்த திட்டம் 1545 அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தை 500 கோடி செலவில் விரிவு படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மட்டும் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது  1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  8.15 முதல் 8.50 க்கு மணிக்குள் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் காலை 6 மணி முதல் 2 மணி வரை பணிபுரிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உணவு சமைத்து மாணவர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் இதில் எந்த வித பிரச்சனையும் ஏற்பட கூடாது என்றும் அதற்கு பணியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K