ஒரு தக்காளி 17 ரூபாய்… பெங்களூரு சந்தையில் விற்பனை… சமூக வலைதளத்தில் பில் வைரல்!!

0
40

 

ஒரு தக்காளி 17 ரூபாய்… பெங்களூரு சந்தையில் விற்பனை… சமூக வலைதளத்தில் பில் வைரல்…

 

பெங்களூரு சந்தை ஒன்றில் ஒரு தக்காளி 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து இது தொடர்பான இரசீது(Bill) சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.

 

தற்போது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வரலாறு காணாத அளவில் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. சில மாநிலங்களில் தக்காளி கிலோ 200 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

 

இதனால் இல்லத்தரசிகள் பலரும் சமையலுக்கு தக்காளி இல்லாமல் சமைக்கத் தொடங்கியுள்ளனர். உணவகங்களில் கூட தக்காளி இல்லாமல் சமைக்கப்படுவதை பார்க்க முடிகின்றது. மேலும் சிலர் தக்காளியை பயன்படுத்துவதை விட தக்காளி சாஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

 

இந்திய நாட்டில் அந்தந்த மாநில அரசுகளும் தக்காளியின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் தக்காளியை வைத்து பல சம்பவங்கள் நடந்து வருகின்றது. தாம்பூலத்தில் தக்காளி, சீர்வரிசை தட்டில் தக்காளி, மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்குவது போல பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.

 

இந்நிலையில் ஒரு தக்காளியின் விலை 17 ரூபாய் என்ற இரசீது இணையத்தில் தற்பொழுது வைரலாகத் தொடங்கியுள்ளது.

 

பெங்களூரூவில் உள்ள சந்தை ஒன்றில் ஒரு தக்காளி 17 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் தக்காளியின் விலை என்ன என்று வியாபாரியிடம் கேட்டுள்ளார். அதன்படி ஒரு தக்காளி 17 ரூபாய் என்றதும் அந்த வாடிக்கையாளர் விலைக்கு ஏற்ப ஒரே ஒரு தக்காளி வாங்கி அதற்கான இரசீதையும் அதாவது பில்லையும் வாங்கியுள்ளார்.

 

பின்னர் அந்த பில்லை புகைப்படம் எடுத்த அந்த வாடிக்கையாளர் பில்லின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஒரு தக்காளி 17 ரூபாய் என்ற இந்த இரசீது(Bill) சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. இந்த இரசீதை பார்த்த பயனர்கள் அனைவரும் அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.