தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் என்னும் பகுதியில் சாலை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.இதன் உரிமையாளர் சண்முகம் என்பவர்.
இந்த ஆலையத்தில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.இதில் அனைத்து வகையான ஆடைகளுக்கும் சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த தொழிற்சாலையில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று தொழிற்சாலை துவங்கப்பட்டது.
தொடங்கிய சில மணி நேரத்திலேயே திடீரென்று பயங்கர சத்தம் வந்தது பின்பு தொழிற்சாலையில் இருந்து கரும்புகை கிளம்பியது. ஆலையில் இருந்த பாய்லர் வெடித்து தீ பற்றியதை பார்த்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் தீ அதிகாமாக பரவியது அதனால் தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ அதிக அளவில் பரவியதால் போராடி நீண்ட நேரங்களுக்கு பின்னர் தீயை அணைத்தனர்.
இந்த பகுதியில் மின் இணைப்பு பழுதடைந்ததன் காரணமாக மின் தடை ஏற்பட்டிருந்தது. இந்த மின் தடை காரணமாக பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஆலையில் அதிக அளவில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.