முதலாமாண்டு மாணவர்கள் தயாராகுங்கள்!! உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது.
இந்த தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 % ஆகவும், இதில் பெண்கள் 96.38% மற்றும் சிறுவர்கள் 91.45% ஆகவும் பதிவாகி உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து வருகின்றனர்.
சிலர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் வருகின்றனர். அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 75,811 ஆக உள்ளது என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 163 கலைக் கல்லூரிகளில் மொத்தமாக 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தினமும் வேகமாக நடைபெற்று வருகிறது.
75,811 மாணவர்கள் இதுவரையில் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் ஜூலை மூன்றாம் தேதி முதல் தொடங்கப்படும் என்று உயர்க்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்று படிப்பை தொடங்க தயாராகுமாறு அரசால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.