கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

Photo of author

By Parthipan K

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் கேரளாவில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 191 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் ஆவர். இதில், ஒரு குழந்தை, விமானி டி.எம்.சாதே உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள முதல்வர் பிரனாரயி விஜயன் உத்தரவுப்படி மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது.  இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.