ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Photo of author

By CineDesk

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

CineDesk

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது.

இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு 144 தடை உத்தரவை டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், யமுனை ஆற்றின் நீர்மட்டம் இன்று இரவு பத்து மணி முதல் நள்ளிரவு பன்னிரெண்டு மணி  வரை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீரின் ஓட்டத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு பம்ப்புகள் போடப்பட்டுள்ளதாகவும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

எனவே, மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.நாளுக்கு நாள் டெல்லியில் கனமழையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் அடிப்படைத் தேவைகளை இழந்தது மட்டுமல்லாமல் இயல்பு வாழ்க்கையில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.