திடீரென வானில் தோன்றிய பறக்கும் தட்டுகள்!! ஏலியன்கள் நோட்டமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!
நாம் வாழ்கின்ற பூமிக்கு அருகில் ஏலியன்ஸ் என்ற வேற்று கிரக வாசிகள் இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது குறித்து அமெரிக்கா மும்மரமாக தகவல்களை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி அன்று மாலையில் சென்னையில் உள்ள முட்டுக்காடு என்னும் கடல் பகுதியில் வித்தியாசமாக நான்கு பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளது.
இந்த பறக்கும் தட்டுகளை ஓய்வு பெற்ற சி.பி.சி.ஐ.டி மற்றும் டி.ஜி,பி. பிரதீப் பிளிப் ஆகியோர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இவர் முட்டுக்காடு கடற்கரையில் அமர்ந்திருந்த போது இந்த மர்ம தட்டுகளை பார்த்துள்ளார்.
இதைபார்த்த அதிர்ச்சி அடைந்த அவர் இந்த புகைபடங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இது போன்ற தகவல்களை நாம் கேள்வி பட்டிருந்தாலும், புகைபடத்தில் உண்மையாக பார்ப்பது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து பறக்கும் தட்டுகள் ஆராய்ச்சியாளரான சபீர் உசேன் சில கருத்துகளை கூறி இருக்கிறார். அதாவது, இந்த பறக்கும் தட்டுக்களை ஏலியன்கள் தான் அதிகளவில் பயன்படுத்தும்.
எனவே, இது தொடர்பாக ஆராய்ச்சி செய்தால் இந்த பறக்கும் தட்டுகளில் வந்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து விடலாம். இது குறித்து உடனடியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறி உள்ளார்.
இந்த தகவல் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஏலியன்களின் வேலையா? உலகத்தை நோட்டமிடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகிறது.