லட்சக் கடனும் அடைந்து போக.. இந்த வழிகளை பின்பற்றவும்!

0
162
#image_title

லட்சக் கடனும் அடைந்து போக.. இந்த வழிகளை பின்பற்றவும்!

அவசரத் தேவைக்காக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள்.. இதை பின்பற்றினால் சில மாதங்களில் கடனை அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

ஒரு சிலர் கடனை திருப்பிக் கொடுக்க தங்களிடம் உள்ள நகை, சொத்துக்களை விற்பார்கள். அவ்வாறு செய்யாமல் கடனை அடைக்க எளிய வழிகள்…

வாங்கிய கடன்கள் குறித்த குறித்து எழுதவும். எவ்வளவு கடன் வாங்கி இருக்கோம். வட்டி எவ்வளவு. எத்தனை மாதத்தில் கட்ட முடியும் என்பதை கணக்கிடவும்.

மாதம் எவ்வளவு தொகை எடுத்து வைத்தால் விரைவில் கடனை அடைக்க முடியும் என்பதை கணக்கிட்டு மாத பட்ஜெட்டை எழுதவும். அதற்கு ஏற்றார் போல் செலவு செய்யவும்.

உடை, பொருட்களுக்கு அதிகம் செலவு செய்வதை தவிர்க்கவும். கடனை அடைக்கும் வரை துணி, ஷாப்பிங்.. இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

கடனை அடைக்க மாதம் மாதம் ஒரு தொகையை எடுத்து வைத்து வரவும். எக்காரணத்தை கொண்டும் அந்த பணத்தை செலவு செய்ய எடுக்கக் கூடாது.

மற்றவர்களுக்காக தங்களுக்கு தேவையில்லாத.. பயன்படாத பொருட்களை வாங்கி வீட்டை நிரப்புவதை தவிர்க்கவும்.

தங்களுக்கு தேவை என்றால் மட்டுமே ஒரு பொருளை வாங்க வேண்டும். இல்லையென்றால் அவை அனாவசிய செலவில் சேரும்.

ஹோட்டல் உணவை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் அதிக பணம் மிச்சப்படுத்த முடியும்.

தினமும் அந்த நாளில் மீதமான பணத்தை சேமித்து வந்தால் ஒரு பெரியத் தொகை கிடைக்கும். அந்த தொகை கடனை அடைக்க உதவும்.

கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் ஒருவரது பணத்தை கடனை அடைக்கவும் ஒருவரது பணத்தில் குடும்ப செலவுகளையும் பார்க்கலாம்.

தங்கள் வேலை முடிந்த பின்னர் பார்ட் டைம் வேலை பார்க்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கடன் அடைக்க பயன்படுத்தலாம்.