முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!

0
249
Former minister Dindigul Srinivasan admitted to hospital!!
Former minister Dindigul Srinivasan admitted to hospital!!

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கின்றார்.மேலும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார்.2016 ஆம் ஆண்டு வனத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர்,2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராகவும் அதிமுகவின் பொருளாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இவருக்கு கழுத்தில் கட்டி இருந்துள்ளது.அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன் கடந்த நவம்பரில் இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இதே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! 
Next articleஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்!!