மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!!பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !!
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.தற்பொழுது காலை உண்ணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இலவச பஸ் பாஸ் தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
மேலும் தமிழக அரசானது எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு என்றே சிறப்பு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.
இந்த வகையில் தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முன்னால் முதலமிச்சர் ஜெயலலிதா அவர்கள் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போன வருடம் அரசின் நிதிக்கு ஏற்றது போல் லேப்டாப் தயாரிக்க எந்த நிறுவனமும் முன் வராததால் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை.
இந்த நிலையில் ஆண்டுதோறும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டப் வழங்கப்படுவது வழக்கம். இந்த கல்வியாண்டும் பயிலும் மாணவர்களுக்கு இன்னும் வழங்கபடாத நிலையில் தற்பொழுது வழங்கப்படுமா என்ற கேள்வி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயன்பாடிற்கு என்று இலவச லேப்டாப் கூடிய விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.