சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவிற்கு எண்ணூர் விரைவு சாலையில் அரைமீட்டர் சாலையோர பூங்கா, 3 மீட்டர் நடைபாதை உள்ளிட்டவைகளை அமைக்கும் பணி இன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை சுங்கச்சாவடி பகுதியில் நடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர்பாபு கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், திமுகவினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.,வான கே.பி.சங்கர் ரூ.34 கோடி செலவில் 1.9கி.மீ.தூரத்திற்கு கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.