அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

Photo of author

By Divya

அல்சர் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து வித நோய்க்கும் இந்த 1 பானம் போதும்!!

இந்த பரபரப்பான உலகத்தில் நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை எல்லாம் காலத்திற்கேற்ப மாறிவிட்டது.இதனால் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் நாம் பெரிய தவறை செய்து வருகிறோம்.இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம் என்பது தான் நிதர்சனம்.

தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை,மதியம்,இரவு என 3 வேளை உணவு.இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் பல்வேறு பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.இவ்வாறு நாம் தவிர்ப்பதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.வெகுநேரம் உணவு உட்கொள்ள வில்லை என்றால் குடற்புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது.
அடிவயிற்று வலி,குமட்டல்,வயிறு உப்பசம்,கருப்பு நிற மலம்,திடீர் எடை குறைவு,புளித்த ஏப்பம் போன்றவை அல்சர் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக சொல்ல படுகின்றது.இந்த அல்சர் பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி பானம் செய்து பருகி வந்தால் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.மேலும் இந்த பானத்தால் வாய்ப்புண், குடற்புண்,மலசிக்கல்,வயிற்று வலி போன்ற பாதிப்புகளும் நீங்கும்.

அல்சர்,வாய்ப்புண்,வயிற்று வலி,மலசிக்கல் பாதிப்புகளை குணமாக்கும் பானம் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:-

* மோர் -1 டம்ளர்
* சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
* ஓமப்பொடி -1/4 தேக்கரண்டி
*பெருங்காயத்தூள் -1 சிட்டிகை அளவு
*இந்து உப்பு – தேவையான அளவு

செய்முறை :-

ஒரு டம்ளர் மோர் எடுத்து கொண்டு அதில் சீரகப்பொடி,ஓமப்பொடி,பெருங்காயத்தூள்,இந்து உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.இவற்றை காலை மற்றும் இரவு உணவை எடுத்து கொள்வதற்கு முன் குடிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அல்சர்,வாய்ப்புண்,வயிற்று வலி,மலசிக்கல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் நாளடைவில் குணமாகும்.

*மோரில் ப்ரோபையோட்டிக் பாக்டீரியா இருக்கின்றது.இது நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிக்க செய்ய உதவுகின்றது.
*சீரகம் நம் வயிறு மற்றும் உடலின் செரிமான அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துகின்றது. மேலும் அல்சரால் ஏற்படும் வயிற்று வலி,மலசிக்கல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை போக்கும்.
*ஓமத்தில் தைமூல் இருக்கின்றது.இது நாம் சாப்பிட கூடிய உணவை சீக்கிரம் செரித்து விடுகின்றது.இந்த ஓமம் வயிற்றில் ஏற்படும் வலியை தடுக்கும் மற்றும் வயிற்றில் உப்பசம் ஏற்படுவதை குறைக்கும்.
*பெருங்காயத்தூள் உணவு பாதையில் இருக்கின்ற புண்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்றது.
*இந்து உப்பில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,சல்பர்,புளோரைட்,அயோடின் உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் உள்ளது.சிவப்பு நிறத்தில் உள்ள இந்துப்பில் அயன் சத்து அதிகம் உள்ளது.