மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

0
211

மீண்டும் தீவிர முழு ஊரடங்கு…கடுமையான கட்டுப்பாட்டை அளித்த அரசு!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக பாதித்து இருந்தது.கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்று அமல்படுத்தி வருகிறது. அத்துடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

தீவிரமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதனால், அந்த பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும், அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களை கண்காணிக்கவும், கூட்டம் அதிகம் கூடுவதன் காரணமாக தொற்று வேகமாக பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்கி வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றது.

மக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களை மூடுவதற்கு அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும், கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மக்கள் கூட்டமாக தெரிந்தால் முழு ஊரடங்கு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கின்றது.

Previous articleபைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்
Next articleசட்டசபை நூற்றாண்டு விழா! தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்!