சட்டசபை நூற்றாண்டு விழா! தமிழகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர்!

0
99

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா விடுதலை இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதற்கு தலைமை தாக்குவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தருகின்றார். தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் காலை முதல் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தலைமைச் செயலகத்திற்கு உள்ளே வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 10 மணி அளவில் கிளம்பி மதியம் பன்னிரண்டு முப்பது மணி அளவில் சென்னை வந்தடைகிறார். அதன் பின்னர் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அவர் ஓய்வு எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. மாலை 4 மணியளவில் புறப்பட்டு சாலை மூலமாக சட்டசபைக்கு அவர் வருகை தருகின்றார். அதோடு மாலை 5 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்தை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

அதோடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதோடு சட்டப்பேரவைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருப்பதால் ஒரு சில தினங்களாகவே சட்டப்பேரவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

அதோடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு சட்டசபை வளாகம், விமான நிலையம், ஆளுநர் மாளிகை, உள்ளிட்ட முக்கிய இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.இன்று முதல் வரும் ஆறாம் தேதி வரையில் தமிழகத்தில் தங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் வெலிங்டனில் இருக்கின்ற பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியை பார்வையிட்டு 77வது பணியாளர் பயிற்சியை சார்ந்த மாணவ அலுவலர்கள் இடையே உரையாற்றி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.