காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் துவக்கம்!! தமிழக அரசு அறிவிப்பு!!
மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. அதில், மகாத்மா காந்தியடிகள் குறித்து முழுவதுமாக படிக்கும் விதமாக ஒரு காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
இந்த ஆராய்ச்சி நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் பல பேருக்கு காந்திய கல்வி பட்டய படிப்பை கற்பித்து வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை பட்டய சான்றிதழ் பட்டய படிப்பு, சம உரையாடல், யோகா பட்டய படிப்பு மற்றும் கல்வி பட்டைய படிப்பு உள்ளிட்ட பல படிப்புகள் உள்ளது.
இந்த படிப்பிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் கல்வி முதுநிலை பட்டய படிப்பான யோகா மற்றும் முதல்நிலை பட்டய படிப்பில் சேர்ந்து படித்து வரலாம்.
மாகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, அவரின் அகிம்சை வழிகள் மற்றும் மனிதர்கள் தங்களின் வாழ்வில் எப்படி நடந்து கொண்டு எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பல தகவல்களை இந்த படிப்பின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலையில் பட்டய படிப்பிற்கான வகுப்புகள் நடைபெறும். அதேப்போல், சனிக்கிழமையின் மாலை நேரத்தில் முதல்நிலை பட்டய படிப்பிற்கான வகுப்புகள் நடைபெறும்.
இந்த படிப்பிற்கு தற்போது விண்ணப்ப பதிவு துவங்கி உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை மேலும் அறிந்து கொள்ள 9995123091 என்ற எண்ணிற்கு அழைத்து அறிந்து கொள்ளலாம்.