சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி… சிக்கிய ஐ.டி. ஊழியர்!

0
806
சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி... சிக்கிய ஐ.டி. ஊழியர்!
chennai news

சென்னை மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியரிடமிருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுவினால் ஏற்படும் குற்றங்களை விட, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகளால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அண்மையில் கூட தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்ய்பவர்களுடன் தமிழக போலீசாருக்கு தொடர்பு இல்லாமல் இவ்வளவு தூரம் கஞ்சா பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றமே விமர்சித்திருந்தது.

மேலும், தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன,

இந்நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஐடி ஊர்களிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மடிப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த ஆட்டோவில் பயணம் செய்த இளைஞரின் பையில் ஒன்றை கோடி ரூபாய் மதிப்புடைய 7 கிலோ உயர் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நங்கநல்லூர் பகுதியில் சேர்ந்த சீனிவாச ராகுல் (29 வயது) என்பதும். அவர் பெருங்குளத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது.

இதனையடுத்து இவருக்கு இந்த கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னை சென்டரல் ரயில்வே நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்குமார் யாதவ் என்றாகி 21 வயது இளைஞரிடமிருந்து ஆறு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleDry Fruits Milk Shake recipe in Tamil: ஆரோக்கியமான மில்க் ஷேக்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..!
Next articleவெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிஸ்ட்! முடிவு சன் ரைசஸ் கையில்!