மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனை உடனடியாக குணமாக!! இதை பண்ணுங்க போதும்!!

0
108

மூட்டு வலி இடுப்பு வலி பிரச்சனை உடனடியாக குணமாக!! இதை பண்ணுங்க போதும்!!

மூட்டுவலி மற்றும் இடுப்பு வலி பிரச்சனைக்கு செலவே இல்லாம நமது சுற்றுச்சூழலில் காணப்படும் சில மூலிகைகளை வைத்து ஒரு சிறந்த வீட்டு வைத்தியத்தை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தற்போது ஏராளமானோருக்கு இந்த மூட்டு வலி பிரச்சனை இருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்றால் மூட்டு பகுதியில் காணப்படுகிற சவ்வின் தேய்மானம் அல்லது அந்த மூட்டு பகுதியில் இருக்கக்கூடிய ஜெல்லானது வறட்சி அடைந்து இந்த மூட்டு பகுதிகளில் வலி ஏற்படுகிறது.

அதேபோல் ஏராளமானோருக்கு இடுப்பு வலி பிரச்சனையும் ஏற்படுகிறது. சிலருக்கு வயது அதிகமாவதாலோ அல்லது ஏதேனும் இடுப்பில் அடிபட்டிருந்தாலோ இடுப்பில் இருக்கும் ஜவ்வு விலகி இருந்தாலோ என்று பல காரணங்களால் இந்த இடுப்பு வலி பிரச்சனை ஏற்படுகிறது. நூற்று தொண்ணூறு சதவீதம் பெயர்கள் இந்த இடுப்பு வலி பிரச்சினையால் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.

நமது சுற்றுச்சூழலில் கிடைக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்து இந்த மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி பிரச்சனையை எவ்வாறு குணமாக்குவது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஐந்து ஆறு எருக்கம் பூக்கள்
10 எருக்கம் இலைகள்
புளிய மரத்தின் இலைகள்
கல் உப்பு

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எருக்கம் பூ எருக்கம் இலைகள் புளிய மரத்தின் இலைகள் அனைத்தையும் சிறிது சிறிதாக கட் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். இதை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு இளம் சூட்டிற்கு வரும் வரை ஆற விடவும். இந்த தண்ணீர் ஆனது இளம் சூட்டில் இருக்கும் போது வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு கொதிக்க வைத்து எடுத்துக்கொண்ட இந்த தண்ணீரை ஒரு துணியில் நனைத்து மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்து மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் இந்த தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுத்து வரவும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வர மூட்டுகளில் இருக்கக்கூடிய வலிகள் இடுப்புகளில் இருக்கக்கூடிய வலிகள் என அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

பொருட்களின் பயன்கள்:
இது சேர்த்து இருக்கக்கூடிய எருக்கம் பூ மற்றும் இலைகள் வாதத்தினால் ஏற்படக்கூடிய வலி வீக்கம் ஆகியவற்றை நிரந்தரமாக குணமாக்க கூடியது. எனவே மூட்டு வலி இடுப்பு வலி மூட்டு வீக்கம் மூட்டு எரிச்சல் பாத எரிச்சல் என்று பல வழிகளால் அவதிப்படுபவர்கள் இது போன்று தண்ணீரை கொதிக்க வைத்து அதை மூன்று நாட்களுக்கு வலி இருக்கும் இடங்களில் நன்கு ஒத்தடம் கொடுத்து வர உடனடியாக அனைத்து வலிகளும் நிரந்தரமாக குணமாகும்.

Previous articleஷாம்பூ உடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்தி பாருங்கள்!! முடி வளர்வது நிற்கவே நிற்காது!!
Next articleகருப்பை பலமடைய பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!!