ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமலேயே சிறுநீரக கற்களை அகற்றலாம்!! எப்படி தெரியுமா?
நமது சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இந்த கற்களை எவ்வாறு கரைப்பது எந்த மருந்தை பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரும் பொதுவான பிரச்சனை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவது தான். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவது பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிகமாக வருகின்றது. தவறான பழக்கங்கள், ஒழுங்கற்ற உணவு பழக்கம் போன்று பல பிரச்சனைகள் காரணமாக ஆண்களுக்கு சிறுநீரகத்தித்தில் கற்கள் ஏற்படுகின்றது.
இந்த சிறுநீரக கற்கள் எதனால் தோன்றுகிறது என்றால் அதிகமாக தண்ணீர் குடிக்காமல் ஒழுங்கான முறையில் சிறுநீர் கழிக்காமல் இருக்கும் பொழுது சிறுநீரகத்தித்தில் உப்பு படிந்து இந்த கற்கள் தோன்றுகிறது. சிறுநீரக கற்களால் மலச்சிக்கல் போன்ற மேலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும் மருந்தை எவ்வாறு தயார் செய்வது எவ்வாறு அதை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* மக்காச் சோள வேர்
* நாட்டு சர்க்கரை
இதை தயார் செய்யும் முறை…
முதலில் மக்காச் சோளத்தை எடுத்துக் கொள்ளவும். அதை உரிக்கும் பொழுது அதில் இருக்கும் வேர்ப்பகுதி தான் நம் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைக்க உதவுகின்றது.
மக்காச் சோளத்தில் இருக்கும் இந்த வேரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதிக்கும் பொழுது மக்காச் சோளத்தில் இருந்து எடுத்த இந்த வேரை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதை இறக்கி கொள்ளவும். இதில் கசப்பு சுவையும், உவர்ப்பு சுவையும் அதிக அளவு இருக்கும். அதனால் இதில் சுவைக்காக நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை தினமும் மூன்று வேலை குடிக்க வேண்டும். அதும் காலை நேரங்களில் மூன்று நாள் தொடர்ந்து குடித்தால் மூன்றாவது நாள் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். மற்ற வைத்திய முறைகளை செய்து அதிக வலியுடன் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைப்பதை விட இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த மருந்தை குடித்து சிறிதளவு வலியுடன் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைத்து வெளியேற்றலாம்.
மக்காச் சோளம் கிடைக்காத பொழுது பயன்படுத்தும் வேறு பொருட்கள்…
இந்த மக்காச் சோளத்தின் வேர் கிடைக்கத நேரத்தில் முள்ளங்கி சாறு எடுத்துக் கொள்ளலாம். இதனை குடிக்கும் பொழுது அதிகளவு சிறுநீர் வெளியேறும். இதனால் சிறுநீர் கற்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
முட்டைக் கோஸை தண்ணீரில் வேகவைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலமும் சிறுநீரக கற்களை குணப்படுத்தலாம்.
முருங்கை பீன்ஸ் எனப்படும் பீன்ஸை தோலுடன் தண்ணீரில் வேகவைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலமும் சிறுநீரக கற்களை குணப்படுத்தலாம்.
சிறுநீர் கற்களை குணப்படுத்த வாழைத் தண்டு சாறையும் குடிக்கலாம். வாழைத் தண்டு சாறில் வாழைப் பூவையும் சேர்த்து குடிப்பதன் மூலம் இன்னும் அதிகம் பலன் கிடைக்கும்.
பிஞ்சு நெருஞ்சி முள்ளை காலை வேலையில் வாயில் போட்டு மென்று முழுங்க வேண்டும். இந்த பிஞ்சு நெருஞ்சி முள்ளில் இருக்கும் சாறு வயிற்றினுள் போகும் போது சிறுநீர் அதிகளவு வெளியேறும். இதனால் சிறுநீர் கற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.