உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

0
86
#image_title

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

நம் உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை மிகவும் முக்கியம். இந்த எலும்பு வலிமை பெற ஆட்டு எலும்பில் சூப் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

1)ஆட்டு எலும்பு – 1/4 கிலோ
2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
3)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
4)பூண்டு – 4 பற்கள்(நறுக்கியது)
5)இஞ்சி – 1 துண்டு(நறுக்கியது)
6)சின்ன வெங்காயம் – 8(நறுக்கியது)
7)தக்காளி – 1(நறுக்கியது)
8)கொத்தமல்லி இலை – சிறிதளவு
9)உப்பு – தேவையானஅளவு
10)பட்டை – 1 துண்டு
11)ஏலக்காய் – 1
12)சீரகம் – 1/2 தேக்கரண்டி
13) மிளகு – 1 தேக்கரண்டி
14)கறிவேப்பிலை – 1 கொத்து
15)கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து பட்டை, மிளகு, சீரகம், ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

அடுத்து அடுப்பை அணைத்து விட்டு அதில் கொத்தமல்லித் தூள் சேர்த்து கலந்து விடவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கர் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து ஆட்டு எலும்பு சேர்த்து கிளறவும்.

பிறகு நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறவும். அடுத்து மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்.

இதனை தொடர்ந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும். 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த எலும்பு சூப் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வாரம் ஒருமுறை ஆட்டு எலும்பு சூப் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள எலும்பு பல மடங்கு வலிமை பெறும்.