GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

0
139
#image_title

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி கூடிய விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,000 தொட்டு விடும் போல.

வரலாறு காணாத தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,615க்கும் ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று அதன் அதிகரித்து இருக்கிறது.

அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 அதிகரித்து,ரூ.53,280க்கும்,ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.6,660க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.392 அதிகரித்து ரூ.58,120க்கும் விற்பனையாகின்றது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.88க்கும்,ஒரு கிலோ ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.