அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

0
212
#image_title

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

திமுக கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க மக்களே. ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொளுத்தும் வெயில் என்றும் பார்க்காமல் மக்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் காமநாயக்கன்பட்டி, கோவில்பட்டி பாரதிநகர் ஆகிய பகுதிகளில் வேட்பாளர். சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து கடம்பூர் ராஜூ, சி.த செல்லபாண்டி ஆகியோர் மக்களிடைய வாக்கு சேகரித்தனர். அப்பொழுது மக்களிடையே பேசிய கடம்பூர் ராஜூ “தற்பொழுது வரவுள்ள தேர்தலில் பாஜக கட்சி தலைமையிலான மூன்றாவது அணியை பற்றி எந்தவொரு கவலையும் கிடையாது. அதிமுக கட்சிக்கு எதிரியாக இருப்பது திமுக கட்சி தான். திமுக கட்சி நாட்டுகே எதிரியாக இருக்கின்றது.

கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் டாஸ்மாக்கை படிப்படியாக மூடி விடுவோம் என்று கனிமொழி கூறினார். ஆனால் கூறியதற்கு எதிராக டாஸ்மாக் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. மேலும் டாஸ்மாக்கில் தற்பொழுது நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட 10 ரூபாய் அதிகமாகதான் விற்பனை செய்யப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் தற்பொழுது போதைப் பொருளானது பெட்டிக்கடை வரை கிடைக்கின்றது. இந்த போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது.

மேலும் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு என்பது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது மின்சார கட்டணம் உயர்வு என்பது இல்லை. ஆனால் திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை நினைத்தாலே ஷாக் அடிக்கின்றது.

சட்டவிரோதமாக திமுக கட்சி சம்பாதித்த பணத்தை வைத்து ஓட்டுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள். திமுக கட்சி கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

தமிழ்நாட்டின் நலன் குறித்து அதிமுக கட்சி பல கோரிக்கைகளை வைத்தது. அதற்கு பாஜக கட்சி காது கொடுத்து கேட்கவில்லை என்றுதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

பாஜக, காங்கிரஸ் என்று எந்த தேசிய கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் நாம் நம்மை விரும்பிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பொழுது அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருந்தது.

அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதே போல தற்பொழுதும் கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றிக் கூட்டணி. இதற்கு வாக்களித்து ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.