கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் பேங்க் லாக்கரிலிருந்து முக்கிய பொருட்களை கைப்பற்றியது என்ஐஏ.

0
145
Swapna Suresh
Swapna Suresh

இந்த விசாரணையில் ஸ்வப்னா சுரேசை தவிர மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சதீஷ்குமார், சந்திப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் பெயரை பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்தத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான சரித்குமார் என்பவரைக் கைது செய்தனர். இதில் பெரும்புள்ளிகள் சம்பந்தப் பட்டிருக்கும் என்பதால் அந்த வழக்கு விசாரணை என்ஐஏவிற்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் சரித் குமார் அளித்த தகவலின்படி முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது.

இதில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். மேலும் அவர் அங்கு தன் மீது ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அங்கிருந்து வெளியேறி கேரளா அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் விற்பனை மேலாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் தங்க கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இவர்கள் மூவரையும் என்ஐஏ அமைப்பு காவலில் எடுத்து விசாரிக்க அளித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டதால் மூவரையும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிமன்றத்தில் ரிமாண்ட் அறிக்கையை என்ஐஏ அமைப்பினர் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு வங்கிகளில் உள்ள லாக்கரில் பணமும் நகைகளையும் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

அதனடிப்படையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஸ்வப்னா சுரேஷ் வைத்திருந்த 36.5 லட்சம் மதிப்புள்ள பணம், மேலும் மற்றொரு வங்கியின் லாக்கரில் 64 லட்சம் பணமும், ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகளையும் கடந்த 23ம் தேதி பறிமுதல் செய்துள்ளோம் என அறிக்கையில் கூறியிருந்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட சந்திப் நாயர், ஸ்வப்னா சுரேஷ் இருவரையும் ஜாமினில் வெளியே அனுப்பினால், இவர்கள் மீதுள்ள குற்றவியல் ஆதாரங்களை அளிக்க முற்படுவார்கள். தலைமறைவாகவும் ஆகிவிடுவார்கள். மேலும் விசாரணையில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.

விசாரணையில் மேலும் ஸ்வப்னா சுரேஷிடம் இருந்து டிஜிட்டல் ஆவணங்களையும் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதில் சர்வதேச அளவில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரிக்க இருக்கிறோம், ஆகவே இன்னும் கூடுதலாக விசாரணைக்கு நாட்களை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்தனர்.

சிறப்பு நீதிமன்றம் தேசிய புலனாய்வு அமைப்பு சமர்ப்பித்த அறிக்கையைப் பரிசீலித்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை, தங்கக் கடத்தல் முக்கிய குற்றவாளிகளான சந்திப் நாயர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக சுங்கத் துறையினர் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறைப்படி விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.அதற்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து என்ஐஏ விசாரணை முடிந்ததும், சுங்கத்துறையினர் தனியாக விசாரிப்பார்கள். மேலும், ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை 29 ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Previous articleதமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
Next articleஅன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்! மருத்துவர் ராமதாஸ் எழுதிய அதிரடி கடிதம்