குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்!

0
412
#image_title

குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள குட் நியூஸ்!

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம்.

கடந்த ஆண்டு ரூ.1000 ரொக்கமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த பொங்கல் தொகுப்பு மக்களை ஏமாற்றும் விதமாக இருக்கின்றது. பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அதாவது பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலைகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக 1 கோடியே 68 லட்சம் சேலைகள் மற்றும் 1 கோடியே 63 லட்சம் வேட்டிகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Previous articleபடம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?
Next articleகலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?