பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!! 

0
90
Good news for devotees!! 10 darshans in one day Super arrangement by Hindu Charity Department!!
Good news for devotees!! 10 darshans in one day Super arrangement by Hindu Charity Department!!

பக்தர்களுக்கு குட் நியூஸ்!! ஒரே நாளில் 10 தரிசனம் இந்து சமய அறநிலையத் துறையின் சூப்பரான ஏற்பாடு!!  

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை தரிசனம் செய்ய அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

வருகின்ற திங்கட்கிழமை ஜூன் 17ஆம் தேதி ஆடி மாதம் பிறக்க இருக்கிறது. தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு என்று எப்போதும் தனி சிறப்பு உண்டு. ஆன்மீக மாதம் மற்றும் அம்மனுக்கு உகந்த மாதம் என்று இந்த மாதத்தில் ஊரெங்கும் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும். வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது உண்டு.

இந்த முறை சிறப்பு ஏற்பாடாக பக்தர்களுடன் இந்து சமய அறநிலைத்துறையும் சுற்றுலாத் துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஆடி மாத பிறப்பையொட்டி சென்னையில் இரண்டு பிரிவுகளாக இந்த திட்டம் செயல்படுத்தபட  இருக்கிறது.

முதல் பிரிவில் முக்கிய கோயில்களான பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில் திருவுடை அம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன்,, ஆகிய 10 கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ஒரு நாள் ஆன்மீக பயணமாக ரூபாய் ரூ.1000 கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்ததாக 2- வது பிரிவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், முண்டக கண்ணியம்மன், கோலவிழி அம்மன், தியாகராய நகர் ஆலயம்மன், முப்பத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் இதற்கு ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உணவு மற்றும் தரிசனம் சார்ந்த ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 15 க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் சுற்றுலாத்துறை இணையதளத்தில் விண்ணப்பித்தால் அவர்கள் விரும்பிய நாளில் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleசெந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய  ஐகோர்ட்!! 
Next articleஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!!