ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! 

0
34

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! 

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்கம் கிடைத்துள்ளது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்கில் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

ஜப்பான் 7 தங்கம் 8 வெள்ளி 3 வெண்கலம் பெற்று 18 பதக்கங்களுடன் முதலாவது இடத்திலும், 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

அதேபோல் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் பரூல் சவுத்ரி என்ற இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் பந்தய தூரத்தை 9.38 நிமிடங்களில் கடந்துள்ளார். மேலும் அடுத்ததாக பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் ஷைலி சிங்க் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.