மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!!
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி, புழுங்கல் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
ரேசனில் விநியோகம் செய்யும் சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டுகிறது.
ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையை முன்னிட்டு அரசு தரப்பில் ரேசன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்படுவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெல்லம், கடுகு, கரும்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்டவைகள் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டது. இந்த பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு பொருட்களுக்கு பதிலாக மக்களுக்கு ரூ.2000 ரொக்கமாக வழங்க தமிழக அரசு தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.