மக்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தீபாவளிக்கு ஆவின் ஸ்வீட் விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!

Photo of author

By Divya

மக்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தீபாவளிக்கு ஆவின் ஸ்வீட் விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!

தமிழக அரசால் இயக்கப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனம் பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து பாலின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்று வருகிறது. அதுமட்டும் இன்றி பண்டிகை காலங்களில் இந்நிறுவனம் பாலை மூலப்பொருட்களாக வைத்து செய்யப்படும் நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட 255 வகையான பால் பொருட்களை தரமாக செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்காக ஆவின் நிறுவனத்தின் இனிப்புக்கான ஆர்டர் கடந்த வருடங்களை ஒப்பிடுகையில் சுமார் 20% அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் கடந்த தீபாவளி அன்று இனிப்பு பொருட்களுக்கு ரூ.115 கோடி மதிப்பில் ஆர்டர்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சற்று அதிகரித்து ரூ.149 கோடியாக இருக்கிறது. ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.36 கோடி மதிப்பிலான இனிப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது அதன் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 காம்போ பேக் ஸ்வீட்களை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ரூ.300,ரூ.500 மற்றும் ரூ.900 என்பது அந்த காம்போக்களின் விலை ஆகும்.

இந்த தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு பொருட்கள் தயாரிக்க வழக்கத்தை விட அதிக பால் தேவைப்படுவதால் அதன் கொள்முதலை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதனால் பால் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.