மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா !!

0
82
#image_title
மோசமான சாதனையை படைத்த இலங்கை! உலகக் கோப்பை தொடரின் இத்தனை தோல்விகளா
தற்பொழுது உலகக் கோப்பை தொடரின் விளையாடி வரும் இலங்கை அணி மோசமாக விளையாடி உலகக் கோப்பை தொடரில் அதிக தோல்விகளை பெற்று மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி குவாலிபையர் சுற்று மூலமாக தகுதி பெற்று அதன்பின்னர் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று விளையாடி வருகின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர்  தோல்விகளால் தள்ளாடி வரும் நிலையில் நேற்றைய(அக்டோபர்30) போட்டியில் பெற்ற தோல்வி மூலமாக மோசமான உலக சாதனை படைத்துள்ளது.
அதாவது இது வரை நடைபெற்றுள்ள உலகக் கோப்பை தொடரில் அதிக தோல்விஙளை சந்தித்த அணியாக இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் அதாவது இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிதான் உலகக் கோப்பை தொடர்களில் அதிக தோல்விகளை சந்தித்த அணியாக இருந்தது.
ஜிம்பாப்வே அணி உலகக் கோப்பை தொடர்களில் 42 தோல்விகளை பெற்று உலகக் கோப்பை தொடர்களில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து இலங்கை அணி நேற்று(அக்டோபர்30) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றதன் மூலமாக உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் 43வது தோல்வியை பெற்று ஜிம்பாப்வே சாதனையை முறியடித்துள்ளது. மேலும் உலகக் கோப்பை தொடர்களில் அதிக தோல்விகளை பெற்ற அணிகளின் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. மேலும் மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 தோல்விகளை பெற்று உலகக் கோப்பை தொடர்களில் அதிக தோல்விகளை சந்தித்த அணியாக உள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றியும் மற்றும் நான்கு போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது. மேலும் இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 6வது இடத்தில் உள்ளது.