தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!  

0
201
Good news for private school students! Tamil Nadu government announcement!
Good news for private school students! Tamil Nadu government announcement!

தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்,மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சேரும் மாணவ,மாணவிகளுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்தி வருகிறது. மேலும்  தமிழகத்தில் இயங்கி வரும் சிறுபான்மையற்ற சுயநிதி தனியார் பள்ளிகளில்  இலவச கட்டாய கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட   மாணவர்களுக்கான   கல்விக் கட்டணங்களை மாநில அரசே செலுத்தி வருகிறது. இந்த மாணவர்களுக்கான கட்டணம் என்பது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக செலவிடப்படும் தொகையை அடிப்படையாக கொண்டு  நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வித்துறையால் ஒரு மாணவனுக்கு செலவிடப்படுவதாக அறிவிக்கப்படும் தொகையை தனியார் பள்ளிக்கும் அளித்து வருகிறது. இதன்படி, கடந்த 2020-21ம் கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி, 1ம் வகுப்புகளுக்கு ஒரு மாணவனுக்கு ரூ.12458, 2ம் வகுப்புக்கு ரூ.12449 3ம் வகுப்புக்கு ரூ.12578, 4ம் வகுப்புக்கு ரூ.12584. 5ம் வகுப்புக்கு ரூ.12831, 6ம்  வகுப்புக்கு ரூ.17077, 7ம்  வகுப்புக்கு ரூ.17106, 8ம் வகுப்புக்கு ரூ.17027.35   என நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு 2021-22ம் கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி மற்றும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை  ஒரு மாணவனுக்கு ரூ.120768ம்,   என தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டைவிட இந்த  ஆண்டுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போக்சோவில் கைது!
Next articleகீழே இறங்க அடம் பிடித்த பூனை?மனைவிக்கு பயந்து பனைமரத்திற்கு குடியேறிய கணவன்!!