மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பப்ளிக் எக்ஸாம் அட்டவணை வெளியீடு!!

Photo of author

By Divya

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பப்ளிக் எக்ஸாம் அட்டவணை வெளியீடு!!

2023 – 2024 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது வழக்கமான ஒன்றுதான். அதேபோல் இந்த தேர் எந்த நாட்களில் நடைபெறுகிறது, எந்த நேரத்தில் நடைபெறுகிறது, தேர்வுக்கான ரிசல்ட் தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவதை பள்ளிக் கல்வித்துறை வழக்கமாக கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி, நேரம், ரிசல்ட் தேதி உள்ளிட்டவைகள் குறித்த விவரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

சென்னை, கொரட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் பொதுத் தேர்வு குறித்த அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

10 ஆம் வகுப்பு:-

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடைபெற விருக்கிறது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் மே 10 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

11 ஆம் வகுப்பு:-

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் மே 14 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

12 ஆம் வகுப்பு:-

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற விருக்கிறது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.