மக்களே உஷார்!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
41
#image_title

மக்களே உஷார்!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று முன்தினம் உருவானது. அதனை தொடர்ந்து நேற்று காலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகம், புதுவையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த நிலையில் தற்பொழுது அவை புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இவை வங்கக்கடல் பகுதிகளில் 17 ஆம் தேதி வரை நிலவக்கூடும் என்றும் அதன் பின் வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வருகின்ற 19 ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்த வரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.