மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!
பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் வருடந்தோறும் நெல்லையப்பர் கோயிலில் ஆணித்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் திருவிழா நடைபெறவில்லை. தற்பொழுது தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு நெல்லையப்பர் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.இந்த திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த பத்து நாட்களில் முக்கியமான சிகர நிகழ்ச்சி நாளை மறுநாள் பதினொன்றாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்திற்கான விநாயகர், முருகர் ,சண்டிகேஸ்வரர் காந்திமதி அம்மன் சுவாமி ,நெல்லையப்பர் ஆகிய தேர்களை தாயற்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் பதினொன்றாம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். பதினொன்றாம் தேதி அன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தேதியில் பொதுத்தேர்வு ஏதேனும் எழுதுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு இந்த விடுமுறை இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல வங்கிகளுக்கும் இந்த விடுமுறை இல்லை என்றும் கூறியுள்ளனர்.