குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்!

0
113
#image_title

குட் நியூஸ்.. இனி வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பரிவர்த்தனை செய்ய முடியும் – ரிசர்வ் பேங்க் தகவல்!

நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் UPI மூலம் கூகுள் பே,போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருவதால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது.இன்று சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன.

நம் வங்கி கணக்கில் பணம் இருந்தால் மட்டும் தான் நம்மால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.இந்நிலையில் தற்பொழுது வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் இனி பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் UPI பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் மொபைல் போன்கள் மூலம் உடனடி பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் UPI பரிவர்த்தனைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியது.ஜூலை மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.96 பில்லியனாகவும், ஜூன் மாதத்தில் 9.93 பில்லியனாகவும் இருந்தது.

இவ்வாறு UPI பரிவர்த்தனை பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இனி இந்த UPI அப்ளிகேஷன்களை கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம்.அதாவது உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் UPI மூலம் கிரெடிட் தொகையினை செலவு செய்யலாம்.உங்களது வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப வங்கி கணக்கில் அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும் என்று RBI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Previous articleதேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!
Next articleஅஜித்திற்கும் ஷாலினிக்கும் எப்படி காதல் மலர்ந்ததுன்னு தெரியுமா? – செய்யாறு பாலு ஓபன் டாக்!