தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

0
115
#image_title

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முடி உதிர்வை ஏற்படுத்தும் பொடுகு தொல்லைக்கு இயற்கை முறையில் தீர்வு…

பெரு நெல்லிக்காய்
வெந்தயம்
தேங்காய் எண்ணெய்
கறிவேப்பிலை

ஒரு பெரு நெல்லிக்காயை காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். 2 ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் கறிவேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் துருவிய நெல்லிக்காய் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு அதில் வறுத்து அரைத்த வெந்தயப் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து கறிவேப்பிலை பொடி சேர்த்து நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

இதை ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பொடுகு நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

பெரு நெல்லிக்காய்
வெந்தயம்
கறிவேப்பிலை
தயிர்

1 கப் விதை நீக்கிய பெருநெல்லிக்காய், 1/4 கப் வெந்தயம் மற்றும் 1 கப் கறிவேப்பிலையை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த பொடியை தேவையான அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலைக்கு அப்ளை செய்து 1/2 மணி நேரத்திற்கு ஊறவிட்டு பிறகு தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.