அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்கும் ஓபிஎஸ்!

Photo of author

By Sakthi

அரசு பங்களாவை காலி செய்ய அவகாசம் கேட்கும் ஓபிஎஸ்!

Sakthi

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தொடர்ச்சியாக தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அரசு இல்லம் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. சென்ற பத்து வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக, அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் அரசு பங்களாவை காலி செய்து வருகிறார்கள். அங்கே இருந்த அமைச்சர்கள் விடுதியை காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கடந்த பத்து வருட காலமாக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிச்சாமி அங்கேயே தங்கிக் கொள்ள கோரிக்கை வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அங்கு தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக அங்கே தங்குவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் ஓ பன்னீர்செல்வம் அரசு பங்களாவை காலி செய்வதற்கு அவகாசம் கேட்டு இருக்கிறார். தன்னுடைய தம்பி பாலமுருகன் அவர்களின் மறைவு காரணமாக, முழுமையாக பங்களாவை காலி செய்ய இயலவில்லை என்று தெரிவித்த அவர், அவகாசம் கேட்டு இருப்பதாக தெரிகிறது. அதே நேரம் மற்ற அமைச்சர்கள் அரசு பங்களாவை காலி செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அங்கு புரணமைப்பு பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து புதிய அமைச்சர்கள் அங்கே குடியேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.a