பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்!

0
70

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைக்குத்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது. வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல்க்கு வரிகள் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் இந்த நிலை தலைகீழாக இருக்கிறது. அதாவது நாட்டிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குத்தான் அதிக வரி வசூலிக்கப் படுவதாக சொல்கிறார்கள்.

நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் குறைவான வரி விகிதத்தில் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அதேசமயம் வெளிப்படையான வரிவிதிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து தற்போது வரையில் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு சட்டத்தின் படிதான் அனைத்து பொருட்களுக்கும் வரிகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி விதிக்கப்படும் வரிகளில் பல பொருட்களுக்கு பழைய வரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வரிவிதிப்பு குறைந்திருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் வரி விதிப்பு மட்டும் தற்போது வரையில் குறைந்தபாடில்லை. அதற்கு காரணமாக சொல்லப்படுவது அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் காரணமாகவே இந்த பெட்ரோல் மற்றும் டீசல் மட்டும் அதிக வரி வசூலிக்க படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி மதிப்பிற்கும் கொண்டு வருவதற்கு காரணம் அந்தந்த மாநில அரசுகள் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பார்த்தோமானால் antha வகையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் தான் நாட்டிலேயே அதிக வரி வசூலிக்க படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்களுக்கும் போன்றவற்றின் காரணமாக சென்ற மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த சூழலில் இன்றைய தினம் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 76 காசும் டீசல் ஒரு லிட்டருக்கு 88 ரூபாய் 62 காசுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.