300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!
தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. புதியதாக ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் ஆனது உறுதியாகியுள்ளது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பலத்த அளவில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இது மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருக்க தற்பொழுது இறந்த பன்றிகளின் அருகில் இருக்கும் மற்றொரு பண்ணையில் இருக்கும் பன்றிகளை அழிப்பதற்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.விலங்குகளிடமிருந்து இத்தொற்று மக்களுக்கு இது பரவாது என்று கூறினாலும், மற்ற விலங்குகளை பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நாளடைவில் இது மனிதருக்கு பரவும் அபாயம் ஏற்படலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.