பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனால் பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் அளிக்கப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கோவிலூர் தகுதி காலியானதாக அறிவித்ததை சட்டப்பேரவை செயலகம் ரத்து செய்தது.
எனவே,பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரிடம் ஆலோசிக்க இன்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.