திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

0
120
#image_title

திமுகவை முடித்துக்கட்ட ஆளுநரின் ஐந்து நாள் பயணம்!! ஆட்சியை கலைக்க பக்கா பிளான்!!

தமிழக அரசுக்கும் ஆளுநர் கூறும் கருத்துக்கும் எப்பொழுதும் எதிரும் புதிரும் ஆக தான் இருக்கும். அந்த வகையில் தமிழக அரசு பலவளைகளில் ஆளுநரை  இழிவுபடுத்தி வருகிறது.

அதனால் தமிழகத்தில் ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு உள்ள பகையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர ஒரு நாளும் குறைவதில்லை. இதனின் உச்சகட்டம் தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை. அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போதிலும் இலக்கா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியதுதான் இதற்கு முக்கிய காரணம்.

வருமானவரித்துறையின் தரவுகள் ஏதும் முறையாக இல்லை என்று அமலாக்க துறையின் அறிக்கையில் கூறியுள்ள பொழுதும் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுபோலவே தான் ஆளுநரும் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இதனை எல்லாம் காதில் வாங்காத ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

எனவே இது குறித்து மேலிடத்தில் கூறி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அவசரப் பயணமாக ஆளுநர் டெல்லி செல்வதாக கூறுகின்றனர். முன்பெல்லாம் ஆளுநர் டெல்லி சென்றால் முன்கூட்டியான திட்ட நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் இம்முறை திட்டமிடாத பயணம் ஆக ஆளுநர் சென்றுள்ளார்.

மேலிடத்தில் யார் யாரை பார்க்க போகிறார் என்ற ஒரு எந்த ஒரு அறிவிப்பும் தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை. இவ்வாறு ஆளுநர் அவசர பயணம் மேற்கொள்வது திமுகவிற்கு பெரும் அடியாக இருக்கக்கூடும்.

திமுக ஆட்சியை ரத்து செய்ய இது ஒரு வழி வகையாக கூட இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர்.