பாட்டி கைப்பக்குவம்.. கிராமத்து மீன் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

0
160
#image_title

பாட்டி கைப்பக்குவம்.. கிராமத்து மீன் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

நாம் விரும்பி உண்ணும் மற்ற இறைச்சிகளை விட மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணுவதற்கு ஏற்ற அசைவத்தில் ஒன்றாக மீன் இருக்கிறது.மீனில் அதிகளவு ஒமேகா 3 இருப்பதினால் இவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று.

அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த மீனில் சுவையாக குழம்பு செய்ய வேண்டுமென்று ஆசையா?அப்போ இந்த செய்முறையை பாலோ செய்து பாருங்கள் குழம்பின் சுவையைக் கண்டு நிச்சயம் அசந்துடுவீங்க.

தேவையான பொருட்கள்:-

*மீன் – 1/2 கிலோ

*நல்லெண்ணெய் எண்ணெய் – 4 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*தக்காளி – 3(நறுக்கியது)

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*இஞ்சி – 1 துண்டு

*பூண்டு – 8 பற்கள்

*பச்சை மிளகாய் – 2

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*கரம் மசாலா – 1 தேக்கரண்டி

*தேங்காய் – 1/4 கப்

*புளிச்சாறு – 4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கறிவேப்பிலை – 4 கொத்து

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து நன்கு அலசிக் கொள்ளவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அதில் மஞ்சள் சிறிதளவு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1/4 கப் அளவு தேங்காய்,கருவேப்பிலை 3 கொத்து,இஞ்சி 1 துண்டு,பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு மண்சட்டியை வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பிறகு 8 பூண்டு பற்கள்,1 தேக்கரண்டி மிளகு சேர்த்து கொள்ளவும்.அடுத்து நெருக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பிறகு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன்பின் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி மிளகாய் தூள்,2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்,1 தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.அடுத்து எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 முதல் 6 நிமிடம் வரை மீனை வேக வைக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

Previous articleமருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!
Next articleஇதை நுகர்ந்த அடுத்த நிமிடமே எலி இறந்து விடும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!