சருமத்தை இளமையாக வைக்க உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!

0
88
#image_title

சருமத்தை இளமையாக வைக்க உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!

1)கரும் புள்ளிகள்

முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறைய வேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல்லை அரைத்து பூசினால் முழுமையான தீர்வு கிடைக்கும்.

2)சரும வறட்சி

முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்க தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து குளித்து வாருங்கள்.

3)கொப்பளங்கள்

அதிகப்படியான கொப்பளம் இருந்தால் அதை மறைய வைக்க கற்றாழை + வெந்தய பேஸ்டை முகத்திற்கு பயன்படுத்துங்கள்.

வேப்பம் பூவை பொடியாக்கி மஞ்சள் கலந்து முகத்திற்கு பயன்படுத்தி வரலாம்.

4)தேமல்

குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து பயன்படுத்தி வந்தால் முழுமையான தீர்வு கிடைக்கும்.

5)மங்கு

வேப்பிலை மற்றும் துத்தி இலையை அரைத்து முகத்தில் பூசி குளித்தால் அவை விரைவில் மறையும்.

6)வடுக்கள்

முகத்தில் உள்ள வடுக்கள் மறைய வேப்பம் பட்டையை அரைத்து பேஸ்டாக்கி முகத்திற்கு தடவலாம்.

7)பள்ளங்கள்

முகத்தில் ஏற்படும் பள்ளங்கள் மறைய தேங்காய் எண்ணெயில் வேப்ப இலை பொடி சேர்த்து அப்ளை செய்து குளித்து வரலாம்.

8)கருவளையம்

கண்களுக்கு கீழ் தோன்றும் கருவளையம் மறைய உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து கண்களுக்கு கீழ் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

9)சருமப் பொலிவு

சந்தனம் மற்றும் பன்னீரை குழைத்து முகத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறும்.