பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!!

0
162
#image_title

பாட்டி சொன்ன வைத்தியம்.. தேனுடன் இந்த பொருளை கலந்து தேய்த்தால் முடி உதிர்வு பாதிப்பு ஒரே நாளில் நின்று விடும்!!

நாம் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். இவை பொடுகு, தலையில் அரிப்பு, தோல் வியாதிகள் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பாதிப்பதால் இளம் வயது வழுக்கை, வயதான தோற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

முடி உதிர்தல் ஏற்பட முக்கிய காரணம்:-

*பொடுகு தொல்லை

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

*இரசாயனம் கலந்த ஷாம்பு

முடி உதிர்வு நின்று முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம்

*விளக்கெண்ணெய்

*கற்றாழை ஜெல்

*தூயத் தேன்

செய்முறை:-

தேவைக்கேற்ப சின்ன வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இந்த வெங்காய சாற்றை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.

அதன் பிறகு அதில் விளக்கெண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை முடிகளின் வேர்காள் பகுதியில் படுமாறு தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி முடியை நன்கு அலசவும்.

இவ்வாறு வாரத்திற்கு 2 முறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் முடி உதிர்தல் பாதிப்பு நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.