சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!
வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் சூட்டு கொப்பளமும் ஒன்று. இவை உடலில் அதிகப்படியான சூடு உருவாகுவதால் ஏற்படுகிறது. இந்த சூட்டு கொப்பளங்கள் உடலில் அங்கங்கே உருவாகி வலி, எரிச்சலை உண்டு பண்ணும்.
சூட்டு கொப்பளங்கள் உருவாகி விட்டால் அதை மறைய வைக்க இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை ஜெல்
2)சந்தனம்
3)மஞ்சள்
4)தயிர்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 தேக்கரண்டி சந்தனம், 1 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1/2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை உடலில் உள்ள கொப்பளங்கள் மீது தடவினால் அவை எளிதில் பழுத்து உடைந்து விடும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை
2)மஞ்சள்
3)கற்றாழை ஜெல்
செய்முறை:-
ஒரு கப் வேப்பிலை மற்றும் ஒரு துண்டு கற்றாழையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் சேர்த்து குழைத்து சூட்டு கொப்பளங்கள் மீது தடவினால் அவை எளிதில் மறைந்து விடும்.