ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்த விமான கண்காட்சியின் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், இந்தியாவில் ஆரம்பமாகும் நிறுவனங்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும், தற்பொழுது தொழிலில் வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகளை சார்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அதேபோல இந்தியாவைப் பொறுத்தவரை பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதும் மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது என இரண்டு வெற்றிகளை தொடும் வகையில் செயல்படுவதாக கூறினார்.
அந்த வகையில் பாதுகாப்பு உபகரண உற்பத்தி துறையில் முதலீடு செய்ய வரும் சர்வதேச நாடுகளுக்கு இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களான தமிழகம் உத்தர் பிரதேசம் உள்ளிட்டவை ஊக்கத்தொகை வழங்கி வருவதோடு பாதுகாப்பு உற்பத்தி துறைக்கு அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும் அதேபோல சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு வந்து புதிய நிறுவனங்களை தொடங்கும் பொருட்டு அதனை காக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதலீடுகள் இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறினார். மேலும் அவ்வாறு அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு உண்டாகும் தடைகளை விரைவில் ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் உறுதி கூறினார்.