இளநரை, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, பேன் தொல்லை.. அனைத்திற்கும் தீர்வு இதோ..!!

0
154
#image_title

இளநரை, முடி உதிர்தல், பொடுகு தொல்லை, பேன் தொல்லை.. அனைத்திற்கும் தீர்வு இதோ..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் முடி சார்ந்த பல வித பிச்சனைகளை சந்தித்து வருகிறோம். இளநரை, முடி உதிர்வு, பொடுகு தொல்லை, பேன், ஈறு, அரிப்பு உள்ளிட்டவைகளால் நம் கூந்தலின் அழகு கெட்டுவிடுவதால் அதை சரி செய்ய நாம் செயற்கை பொருட்களை தலைக்கு பயன்படுத்துகிறோம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமே தவிர எந்தவித பலனும் கிடைக்காது.

எனவே இயற்கை பொருட்களை தலைக்கு பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

1)இளநரைக்கு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

*அவுரி பொடி – 3 தேக்கரண்டி

*மருதாணி பொடி – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி அவுரி பொடி மற்றும் 2 தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு எலுமிச்சை சாறு கலந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.

பின்னர் இந்த பேஸ்டை தலை முடிகளின் வேர்காள் பகுதிகளில் படும்படி தடவி வந்தால் இளநரை அனைத்தும் கருமையாக மாறிவிடும்.

2)முடி உதிர்வுக்கு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*கற்றாழை ஜெல்

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இதை தலை முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின் தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளரும்.

3)பொடுகு தொல்லைக்கு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

*ஆரஞ்சு தோல்

*எலுமிச்சை சாறு

செய்முறை…

தேவையான அளவு ஆரஞ்சு தோல் எடுத்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இதை தலை முடிகளின் வேர்காள் பகுதிகளில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.

4)பேன் தொல்லைக்கு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம்

*எலுமிச்சை சாறு

செய்முறை…

தேவையான அளவு சின்ன வெங்காயம் எடுத்து தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பேன் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.