நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!!
இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும்.
இளநரை உருவாகக் காரணம்:-
*ஊட்டச்சத்து இல்ல உணவு
*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்
*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல்
*முறையற்ற தூக்கம்
*மன அழுத்தம்
நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் டை தயாரிக்கும் முறை:-
தேவையான பொருட்கள்:-
*பெரு நெல்லிக்காய் பொடி – 2 தேக்கரண்டி
*அவுரி பொடி – 3 தேக்கரண்டி
*மருதாணி இலை பொடி – 3 தேக்கரண்டி
*கருவேப்பிலை பொடி – 2 தேக்கரண்டி
*கருஞ்சீரகப் பொடி – 2 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் வீட்டில் செய்து வைத்துள்ள அல்லது கடையில் வாங்கிய மருதாணி பொடியை சேர்த்து 2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு மற்றும் சம அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து காற்று புகாத வண்ணம் ஒரு மூடி கொண்டு மூடவும்.
மறுநாள் காலையில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து அவற்றை வெள்ளை முடி மற்றும் வேர் பகுதிகளில் படுமாறு அப்ளை செய்ய வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வரை வைத்திருந்து வெறும் தண்ணீர் மட்டும் கொண்டு தலையை அலச வேண்டும்.
பின்னர் தலைமுடி நன்கு காய்ந்த பிறகு ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் அவுரிப் பொடி, நெல்லைக்காய் பொடி, கருவேப்பிலை பொடி மற்றும் கருஞ்சீரக பொடி உள்ளிட்டவற்றை மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்டை தலையில் அப்ளை செய்து 2 மணி நேரத்திற்கு பின்னர் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி முடியை அலசவும். ஷாம்பு, சீயக்காய் உள்ளிட்ட எவற்றையும் உபயோகிக்க கூடாது.
மறுநாள் தலைக்கு நல்லெண்ணெய் மட்டும் வைத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் இயற்கையாகவே முடி கருப்பாக மாறிவிடும்.