ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!!
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக முதல்வர் இது தொடர்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
இந்த பல்வேறு புதிய திட்டங்கள் பொதுமக்களிடையே பெருமளவு வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த வகையில் தமிழக மக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் பல சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
அந்த வகையில் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நடுத்தர மக்களுக்காக மருத்துவ வசதி முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்கள் ஏராளமானவர்கள் பயனடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்பொழுது கலைஞர் நுற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் ஆகஸ்ட் 6 ம் தேதி மிகப்பெரிய மாரத்தான் போட்டியை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி சென்னையில் மட்டும் 75000 மாரத்தான் போட்டிகளை நடத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இந்த புதிய முயற்சியை கின்னஸ் சாதனைக்காகவும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழகத்திற்கு பயன்படும் வகையில் மருத்துவமனைகளை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பந்தையம் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் தொடங்கி ,அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மீண்டும் மெரினா கடைகரையில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகின்றது.