தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!
மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது.
இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. அந்த வகையில் 38 % ஆக இருந்த அகவிலைப்படி மேலும் 4% உயர்த்தப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து 42 % அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் 4% அகவிலைப்படி, 2023 ஆண் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கணக்கிடப்பட்டு கொடுக்கப்படும், மேலும் பணியாளர்களுக்கான ஊதியத்தில் அகவிலைப்படி ரூ. 10,710 அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளிவந்த அறிவிப்பின்படி 4% உயர்வால், பணியாளர்களின் ஊதியம் மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் ஆகும். எனவே பணியாளரின் அகவிலைப்படி 10,710 ஆக அதிகரிக்கும்.
அதன்படி பணியாளர்களுக்கு ரூ.1,020 கூடுதல் ஊதியம் கிடைக்கும். ஆனால் அரசு பணியாளர்கள் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வந்தனர்.
எனவே இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசானது இந்த அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் துவங்கும் என்று தெரிவித்தது. எனவே இன்று முதல் இந்த அகவிலைப்படி 4% உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் அரசு பணியாளர்களின் ஊதியம் உயரும் என்று அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதன்படி, மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் என்னும் பட்சத்தில் பணியாளரின் அகவிலைப்படி ரூ. 10,710 அதிகமாகும்.
இதனையடுத்து மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதத்தில் கொடுக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.