சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் வீரர்!! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் அறிவிப்பு!!
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தமிம் இக்பால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் உலககோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இக்பால் தற்போது மோசமாக விளையாடி வருகிறார்.
பங்களாதேஷ் வீரர்களில் மிகவும் சிறந்த வீரரான இவருக்கு 34 வயதாகிறது. இந்த வகையில் தற்போது தனது பதினாறு வருடகால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறி உள்ளார்.
தமிம் இக்பால் கண்ணீருடன் தனது ஓய்வைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். இவருக்கு இன்னும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் வயது இருக்கும் பட்சத்தில் தற்போது ஏன் இவ்வளவு அவசரமாக தனது ஓய்வை அறிவித்தார் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.
இவர் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார். பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்ந்து முதல் ஆட்டத்தில் விளையாடி வந்தார்.
இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் இவர் தனது ஓய்வை அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவர் 241 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தமாக 8313 ரன்களை எடுத்துள்ளார். இவர் வங்கதேச அணிக்காக சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
வங்கதேச அணிக்காக 14 சதம் அடித்து வரலாறு படைத்தவர் தமிம் இக்பால். இதுமட்டுமின்றி வங்கதேச அளவில் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து முக்கிய வீரராகவும் உள்ளார்.