நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள்! டிரெண்டிங்கிள் மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி!!

0
35

நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள்! டிரெண்டிங்கிள் மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி!!

 

டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய செயலிக்கு 4 மணி நேரத்தில் 5 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு நிறைய மாற்றங்களையும் நிறைய வசதிகளையும் டுவிட்டர் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். அதே சமயம் பல கட்டுப்பாடுகளையும் டுவிட்டர் பயனாளர்களுக்கு எலான் மஸ்க் அவர்கள் விதித்து வருகிறார். இதில் முக்கியமாக புளூ டிக் வசதிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

எலான் மஸ்க் அவர்கள் டுவிடட்ரை வாங்குவதற்கு முன்பு புளூ டிக் எனபடும் வசதிக்கு கட்டணம் இருந்தது இல்லை. இந்த புளூ டிக் வசதியை அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் அரசு நிறுவனங்களும் தங்களின் உண்மையான கணக்கு இதுதான் என்பதை மக்களுக்கு காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இதையடுத்து புளூ டிக் வசதிக்கு எலான் மஸ்க் கட்டணம் நிர்ணயித்தார். மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்.

 

இந்நிலையில் டுவிட்டருக்கு போட்டியாகவும் இணையாகவும் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

திரெட்ஸ் செயிலியை அறிமுகப்படுத்தியதில் இருந்து 4 மணி நேரத்தில் 5 மில்லியன் மக்கள் இந்த திரெட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த திரெட்ஸ் செயலி இன்ஸ்டாகிராம் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலமாக பயனர்கள் இந்த திரெட்ஸ் செயலியை தங்களது மொபைல்களில் பதிவிறக்கம் செய்து தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கின் யூசர் நேம் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி திரெட்ஸ் செயலியில் உள்நுழைந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.